ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கோட்டகோகாமா போராட்டக்காரர்கள் கொண்டாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அங்குள்ள பொதுமக்களை ஆளும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.
மேலும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
”කවදාවත් පන්නන්න බැරි වෙයි කියපු යුද විරුවා අපි පැන්නුවා.”
ජනපතිගේ ඉල්ලා අස්වීමේ ලිපිය ලැබුණු ආරංචියට අරගල භුමියේ ප්රතිචාරය pic.twitter.com/r3sX1zkiol— BBC News Sinhala (@bbcsinhala) July 14, 2022
இந்தநிலையில், ஜனாதிபதி அதிகாரப்பூர்வ இல்லம் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அருகில் உள்ள மாலைத் தீவில் தஞ்சம் அடைந்தார், அதன்பின் தற்போது கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுடைந்துள்ளார்.
ஜூலை 13ம் திகதியே கோட்டாபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என அந்த நாட்டின் சபாநாயகர் தெரிவித்து இருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக வந்தடைந்த பிறகே, அதாவது ஜூலை 14ம் திகதியே தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
People celebrate on Colombo streets after Sri Lankan President Gotabaya Rajapaksa’s resignation pic.twitter.com/bJhBBRtD0H #LKA #SriLanka #SriLankaCrisis
— Sri Lanka Tweet 🇱🇰 💉 (@SriLankaTweet) July 14, 2022
இருப்பினும் கோட்டாபய தனது ராஜினாமா கடிதத்தை நிச்சயமாக வழங்கினாரா? மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட இந்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற குழப்பங்கள் போராட்டக்காரர்கள் மத்தியில் நீடித்தது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்வதாக அனுப்பிய கடிதம் போராட்டக்காரர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாதக்கணக்கில் போராடி வந்த கோட்டகோகாமா போராட்டக்காரர்கள் கொழும்பு வீதிகளில் கொண்டாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் பிரச்சனைக்கான தீர்வு எனக்கு தெரியும்…பிரேசில் ஜனாதிபதி அதிரடி!
போராட்டக்காரர்கள் கொழும்பு விதிகளில் நடனம், பாடல், மற்றும் வண்ண பட்டாசுகளை வெடித்து கோட்டாபய ராஜபக்சவின் ராஜினாமாவை கொண்டாடி வருகின்றனர்.