பிரித்தானியாவில் வாழும் கேரளத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, உலக சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த Anne Winston (8), பிரித்தானியாவில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவருகிறார்.
உலகிலுள்ள 195 நாடுகளின் தலைநகர்களின் பெயர்களையும், 7 நிமிடங்கள், 15 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை ஒன்றை முறியடித்துள்ளார் Anne.
இதற்கு முன் 10 வயது சிறுமி ஒருத்தி இதே சாதனையைச் செய்துள்ள நிலையில், எட்டு வயதேயான Anne, மிகவும் இளவயதில் 195 நாடுகளின் தலைநகர்களின் பெயர்களை, 7 நிமிடங்கள், 15 விநாடிகளில் ஒப்புவித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
Anne, கேரளாவிலுள்ள Muvattupuzha என்ற இடத்தைச் சேர்ந்த Winston Jacob மற்றும் Jincy Winston தம்பதியரின் மகள் ஆவார். தம்பதியர் தற்போது பிரித்தானியாவிலுள்ள Cardiffஇல் வாழ்ந்து வருகிறார்கள்.
Anne, இறகுப்பந்து விளையாட்டிலும் பல போட்டிகளில் வென்றுள்ளதுடன், குங் ஃபூ மற்றும் நீச்சலும் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.