இந்திய பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பு சந்தைக்கும் முதுகெலும்பாக இருக்கும் ஐடி சேவைத் துறை பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது, இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இது வழக்கத்திற்கு மாறாக நடக்கக்கூடியது, பொதுவாகவே டாலர் மதிப்பு உயர்ந்தால் (அதாவது ரூபாய் மதிப்பு சரிந்தால்) ஐடி நிறுவன பங்குகள் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிந்து, ஐடி நிறுவன பங்குகள் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்யும், ஆனால் இப்போது நேர் எதிராக நடக்கிறது.
இந்த நிலைக்கு என்ன காரணம்..? ஐடி பங்குகள் சரிய முதலீட்டாளர்கள் மன நிலை மட்டுமே காரணமா..? ஐடி பங்குகள் சரிவை கண்டு ஐடி ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா..?
அமெரிக்க, பிரிட்டன் நாடுகளை ஓரம்கட்ட ரஷ்யா புதிய திட்டம்.. இனி நாங்களும் பட்டியலிடுவோம்..!
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்திய ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்தியாவைக் காட்டிலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தான் அதிகப்படியான வர்த்தகத்தை வைத்துள்ளது. இதனால் டாலர் மதிப்பு உயரும் போது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
ரூபாய் மதிப்பு
வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, அன்னிய முதலீடு வெளியேற்றம், பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, அன்னிய முதலீடு வெளியேற்றம் எனப் பல காரணிகள் அடிப்படையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதிகமாகச் சுமார் 80 ரூபாய் வரையில் சரிந்து உள்ளது.
41 வருட உச்சம்
இதேவேளையில் அமெரிக்காவில் பணவீக்கம் 41 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளதால் அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் வங்கி பணவீக்க பாதிப்பை எதிர்கொள்ளக் கட்டாயம் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் சூழ்நிலையில் இருக்கும் போது ரூபாய் மதிப்பு 80 ரூபாயை தாண்டியும் செல்லக்கூடும் நிலையில் தான் உள்ளது. இந்த வேளையிலும் ஐடி பங்குகள் சரிவில் உள்ளது ஏன்.
ஐடி பங்குகள்
ஜூலை 8ஆம் தேதி முதல் ஐடி பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது, பிஎஸ்ஈ ஐடி இன்டெக்ஸ் ஜூலை 8ஆம் தேதி 28,798 புள்ளிகளில் இருந்து 6.29 சதவீதம் சரிந்து 26,985 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் பிஎஸ்ஈ ஐடி இன்டெக்ஸ் 45.51 புள்ளிகள் சரிந்து 27,122.90 புள்ளிகளை எட்டியுள்ளது.
முக்கியக் காரணம்
இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம், முதலீட்டாளர்கள் ஐடி சேவை நிறுவனங்களுக்குக் கிடைக்கக் கூடிய அதிகப்படியான வருமானத்தைக் காட்டிலும் இத்துறையில் இருக்கும் அதிகப்படியான ஊழியர்கள் வெளியேற்ற விகிதம், ரெசிஷன் பயம், உலகளவில் நிறுவனங்கள் டெக்னாலஜிக்கு செலவிடும் தொகையைக் குறைப்பது போன்றவை இத்துறைய பெரிய அளவில் பாதிக்க உள்ளது.
செலவுகள் அதிகரிப்ப
இதேபோல் ஐடி சேவை நிறுவனங்களின் சப்காண்டிராக்ட் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், ஊழியர்களைத் தக்க வைக்க அளிக்கப்படும் அதிகப்படியான செலவுகளாலும் ஐடி சேவை நிறுவனங்களின் லாபம் பெரிய அளவில் பாதிக்கும்.
ஐடி ஊழியர்கள்
இதற்கு ஏற்றார் போல் டிசிஎஸ், ஹெச்சிஎல் தனது காலாண்டு முடிவுகளில் சந்தை கணிப்பை காட்டிலும் குறைவான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது கட்டாயம் ஐடி ஊழியர்களைத் தற்போதைய வர்த்தகச் சூழ்நிலையில் பாதிக்காவிட்டாலும், நீண்ட கால அடிப்படையில் அதிகளவில் பாதிக்கும்.
IT companies shares are falling from July 8; Know Why? Does it affect IT employees in India
IT companies shares are falling from July 8; Know Why? Does it affect IT employees in India ஐடி பங்குகள் தொடர் சரிவுக்கு என்ன காரணம்.. இதனால் ஐடி ஊழியர்களுக்குப் பிரச்சனையா..?