இனிப்புகள் விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இனிப்புகளிலே அனைவருக்கும் விருப்பமான ஒன்று குலோப் ஜாமுன். தீபாவளி, பிறந்தாள் விழா என்று எல்லா பண்டிகைகளுக்கும் குலோப் ஜாமுன் வீட்டில் செய்வது வழக்கமான ஒன்று. இதற்கு அதிக மெனக்கெடல் தேவை என்பதால் பலர் இதை வீட்டில் செய்வதில்லை. இந்நிலையில் வெறும் பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமுன் செய்துவிடலாம். இதைப்பற்றிப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிஸ்கட் –2 பாக்கெட், பால் – அரை கப், சர்க்கரை – 1 கப், தண்ணீர் – 1 கப், ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன், சோடா உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
இந்த குலோப் ஜாமுன் செய்ய மேரி கோல்ட் பிஸ்கட் எடுத்துகொள்ள வேண்டும். இரண்டு பாக்கெட் பிஸ்கட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும். அதில் கொதிக்கும் பாலை ஊற்ற வேண்டும். அப்போது பிஸ்கட் கரைய தொடங்கும். நன்றாக கட்டியானதும். அதில் ஏலக்காய் தூள், சோடா உப்பு கலந்து கொள்ளவும். தற்போது அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக மாவை பிசைய வேண்டும். குலோப் ஜாமுன் மாவு போல பிசைய வேண்டும். தற்போது சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீர் மற்றும் சக்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிசு பிசுவென்று ஒட்டும் அளவிற்கு பதம் வந்ததும், அடுப்பை அணைக்கவும். தற்போது சர்க்கரை பாகுவில், உருண்டைகளை போடவும். அரை மணி நேரத்தில் சர்க்கரை பாகை, குலோப் ஜாமுன் உறிஞ்சிக்கொள்ளும். சுவையான குலோப் ஜாமுன் தயார்.