கல்லூரி விடுதிகளில் மின் நூல்களை படிக்க கணினி உபகரணங்கள் வாங்க ரூ.2,13,18,275 நிதி! தமிழகஅரசு அரசாணை

சென்னை: கல்லூரி விடுதிகளில் மின் நூல்களை படிக்கும் வகையில் கணினி உபகரணங்கள் வாங்க ரூ.2,13,18,275 நிதி ஒதுக்கி  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின்நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக ஒரு நூலகத்திற்கு ரூ.80,000 செலவில் 275 கல்லூரி விடுதிகளுக்கு ரூ.2.20 கோடி செலவில் உபகரணங்கள் வாங்கி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை செயல்படுத்தம் வகையில், தற்போது, 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் மின் நூல்களை இணைய வழியில் படிக்க ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்களை எல்காட் மூலம் வாங்க, ரூ.2,13,18,275 நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள  275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், இணையதளம் வழியாக  மின் நூல்களை படிக்க ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்களை எல்காட் மூலம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.