சென்னை: கல்வியும், மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள் என்று காமராஜர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தரமான கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம் என அவர் கூறியுள்ளார்.