வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா,-கனடாவில், மஹாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடானா கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ரிச்மண்ட் ஹில் நகரில் உள்ள விஷ்ணு கோவிலில் நிறுவப்பட்டிருந்த காந்தி சிலையின் அடிப்பக்கத்தில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர், தகாத வார்த்தைகளைக் குறிப்பிட்டிருந்தனர்.காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு, இந்தியா தன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து, டொரான்டோவில் உள்ள இந்திய துணைத் துாதரகம் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில், ‘ரிச்மண்ட் ஹில்லில் உள்ள மஹாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதில் நாங்கள் வேதனை அடைந்துஉள்ளோம்.’இந்த வெறுக்கத்தக்க நிகழ்வு, கனடாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடா அரசை வலியுறுத்தியுள்ளோம்’ என தெரிவித்துள்ளது.
இது குறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில், ‘இது வெறுப்பு காரணமாக நடந்த சம்பவம். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர். இதுபோன்ற குற்றச் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement