காளையை பலியிட்டு குர்பாணி கொடுக்க முயன்றவரை , அந்த காளை திருப்பித் தாக்கி இழுத்துச்சென்றதால் இளைஞர் பரிதாபமாக உயிழந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்.. தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ற சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
கராச்சியில் குர்பாணி கொடுப்பதற்காக பிடித்து வரப்பட்ட காளை ஒன்றின் முன்னங்கால்களை கட்டி அதனை கீழே தள்ளி பலி கொடுக்க இருவர் முயன்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கு உதவு வதற்காக வானரம் போல வந்த இளைஞர் , காளையின் வாலைப்பிடித்து இழுக்க ஆவேசமான காளை துள்ளி குதித்து தன்னை பிடித்திருந்தவர்களை முட்டி கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியது. மாட்டின் காலில் கட்டுவதற்காக மாட்டுடன் பிணைக்கப்பட்டிருந்த நீளமான கயிறு மாட்டை பிடித்திருந்த இளைஞரின் கழுத்தில் சிக்கியதில் அவரை மாடு வீதியில் இழுத்துச்சென்றது.
மாடு இழுத்துச்சென்ற வேகத்தில் கழுத்தில் கயிறு இறுக்கியதால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த மாட்டை பின் தொடர்ந்து சென்று அந்த இளைஞரின் சடலத்தை உறவினர்கள் மீட்டனர்.