டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சோனியா காந்தி உடல் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்தார். உடல்நிலை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த செவ்வாய்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார்.இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருக்கிறார், விரைந்து குணமடைந்து வருகிறார் என மருத்துவமனை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மு.க ஸ்டாலினின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்துள்ளார். மேலும் அவர் விரைந்து நலம்பெற வேண்டும் என வாழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.