கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தனக்கு உடல் சோர்வாக இருந்ததால், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனால் தனது வீ்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருகக வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக முதல்வர் மருத்துவமனை வந்த அவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், ஸ்கேன் முடிந்தவுடன் மாலையில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்,
கொரேனா தொற்று அறிகுறிகளுக்கான விசாரணை மற்றும் கண்கானிப்புக்காக மான்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வீட்டில் தனிமைபடுத்திக்கொண்ட முதல்வர் தற்போது மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தி.மு.க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“