கோத்தபய ராஜினாமா மக்கள் கொண்டாட்டம்.! இடைக்கால அதிபர் ரணில்.!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். அவரது ராஜினாமா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக சபாநாயகர் மகிந்தா யப்பா அபேவர்தனா (Mahinda Yapa Abeywardana) தெரிவித்துள்ளார்.

நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதுவரை, ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால அதிபராக பதவி வகிப்பார் என்றும் தெரிவித்தார்.

புதிய அதிபர் தேர்வு செய்யும் பணியை விரைந்து முடிக்க விரும்புவதாகவும் இதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கேட்டுக் கொண்டார். மேலும், பொதுமக்களும் அமைதிகாத்து இப்பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் இலங்கை தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்னிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

இதனிடையே கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கேட்டு சிங்கப்பூர் வரவில்லை என்றும், அவருக்கு அடைக்கலம் ஏதும் அளிக்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவர் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.