சரக்கில் மிதக்கும் இந்திய மக்கள்.. 30 வருட உச்சமாம்..!

இந்தியாவில் மதுபான உற்பத்தியும் சரி, விற்பனையும் சரி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மக்கள் ஒருபக்கம் மதுபான விற்பனையைத் தடை செய்ய வேண்டும் எனப் போராடி வரும் நிலையில் மத்திய அரசு மதுபானத்தை ஆன்லைன் டெலிவரிக்கான கட்டமைப்பு மற்றும் விதிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது, மறுபுறம் மாநில அரசுகள் பெரிய அளவிலான வருவாயைப் பார்த்து வருகிறது.

இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..?

இந்த நிலையில் லேன்செட் என்னும் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

 30 வருடத்தில்

30 வருடத்தில்

இந்தியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் அதாவது 30 வருடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மது அருந்தும் அளவு சிறிதளவு அதிகரித்துள்ளது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழ்களில் ஒன்றான லான்செட்-ன் ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்கள்

ஆண்கள்

இந்திய ஆண்களில் மது அருந்துவோர் எண்ணிக்கை அனைத்து வயதினரிடமும் அதிகரித்துள்ளது என்று லான்செட் அமைப்பின் மெட்டா ஆய்வின் தரவுகள் கூறுகிறது. இந்த வரிசையில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதேபோல் இந்தியாவில் 79.9 மில்லியன் ஆண்கள் மது அருந்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

 40-64 வயதினர்
 

40-64 வயதினர்

40-64 வயதிற்குப்பட்டவர்கள் மத்தியிலான ஆண்கள் மத்தியில் மது அருந்துவோர் எண்ணிக்கையின் அளவும் மிக அதிகமாக உள்ளது. அங்கு 1990 ஆம் ஆண்டிலிருந்து மது அருந்தும் அளவீடு 5.63 சதவீதம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து 15-39 வயதினர் 5.24 சதவீத உயர்வுடன் உள்ளனர். முதியவர்களுக்கு (65 வயதுக்கு மேல்), 1990 ஆம் ஆண்டு அளவீட்டில் இருந்து 2.88 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெண்கள்

பெண்கள்

லான்செட் ஆய்வின்படி, 15-39 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களின் மது அருந்துதல் 1990 ஆம் ஆண்டிலிருந்து 0.08% அதிகரித்துள்ளது. தற்போது, இந்த வயதிற்குட்பட்ட 5.39 மில்லியன் இந்தியப் பெண்கள் மது அருந்துகிறார்கள் என்று அது கூறியது.

பெண்கள்

பெண்கள்

1990 முதல் 40-64 வயதுடைய பெண்களிடையே மது அருந்துவது 0.15 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விடக் குறைவாக மது அருந்துகின்றனர்.

உடல்நலத்திற்குக் கேடு

உடல்நலத்திற்குக் கேடு

மது அருந்துவது உடல்நலத்திற்குக் கேடு இது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. ஏற்கனவே மக்களின் உணவு முறை மாறியதால் பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில் மது அருந்துவோர் எண்ணிக்கை 30 வருட அளவீட்டைத் தாண்டியுள்ளது வருத்தம் அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Alcohol consumption in India rose little in 30 years – Lancet study

Alcohol consumption in India rose little in 30 years – Lancet study சரக்கில் மிதக்கும் இந்திய மக்கள்.. 30 வருட உச்சமாம்..!

Story first published: Friday, July 15, 2022, 12:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.