வானிலை ஆராய்ச்சி மையம் பிரித்தானியாவுக்கு அதீத வெப்பம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வார இறுதியில் வெப்பம் பயங்கரமாக இருக்கும் என்பதால், பிரித்தானியாவுக்கு சிவப்பு தீவிர உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளுக்கு அதீத வெப்பம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ள வானிலை ஆராய்ச்சி மைய செய்தித்தொடர்பாளரான Grahame Madge, இப்படி ஒரு எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.
லண்டன் முதல் மான்செஸ்டர் வரை அத்தனை பகுதிகளுக்கும், Vale of York பகுதி வரைக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்று கூறியுள்ளார் அவர்.
Credit: PA
இந்த அதீத வெப்பத்தால், எளிதில் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள் மட்டுமின்றி, அனைத்து மக்களுக்குமே உடல் நலப் பிரச்சினைகள் உருவாகக்கூடும் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த எச்சரிக்கை குறித்துப் பேசியுள்ள இங்கிலாந்து தலைமை மருத்துவ அலுவலரான பேராசிரியர் Sir Chris Whitty, மக்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Credit: Paul Marriott
குறிப்பாக, வயதானவர்கள், உடல் நலப் பிரச்சினை உடையவர்களுக்கு உடல் நீர் வற்றுவதால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் heatstroke ஆகிய பிரச்சினைகளின் அறிகுறிகள் ஏற்படுகின்றனவா என்பதை கவனித்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்படி யாராவது பாதிக்கப்பட்டால், உடனடியாக அவர்களை குளிர்ச்சியடையவைப்பதும், அவர்களுக்குக் குடிக்க தண்ணீர் கொடுப்பதும், அவர்களுடைய உயிரைக் காப்பாற்றக்கூடிய செயல்களாக அமையும் என்று கூறியுள்ளார் அவர்.
Credit: ©Graham Hunt