சூப்பர் சிங்கர் வீஜே திவ்யாவை ஞாபமிருக்கா?
விஜய் டிவி டிரேட் மார்க் நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 8 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன், ரம்யா, டிடி, பாவனா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் தொகுத்து வழங்கியுள்ளனர். அந்த வரிசையில் பிரபலமான வீஜேக்களில் திவ்யாவும் ஒருவர். திருமணத்திற்கு பின் கணவருடன் செட்டில் ஆகி விட்ட திவ்யா அதன்பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. தற்போது கணவருடன் ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் திவ்யா இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வீஜே திவ்யாவின் புகைப்படங்கள் திடீரென இணையத்தில் வைரலாகவே நேயர்கள் அனைவரும் 'வீஜே திவ்யாவா இது? இப்படி மாறிட்டாங்களே' என கமெண்ட் பாக்சில் ஹாய் சொல்லி வருகின்றனர்.