செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிடுகிறார்  ரஜினிகாந்த்

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியிடுகிறார்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பு கடந்த 7-ம் தேதி இந்த சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் இன்று ட்விட்டரில் வெளியிடுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.