செஸ் ஒலிம்பியாட் – 2022 : ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரஜினி வெளியிட்ட அசத்தல் டீசர்..

செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டியின் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.

போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் துவக்கவிழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

186 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் இந்த போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியிட்டார்.

பேருந்துகளில் “நம்ம செஸ், நம்ம பெருமை”, “இது நம்ம சென்னை, நம்ம செஸ்”, “வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.