சொந்தமாக இண்டர்நெட் சேவை… இந்தியாவிலேயே முதல் மாநிலம் இதுதான்

இந்தியாவிலேயே சொந்தமாக ஒரு மாநிலம் இணைய வசதியை அளிப்பதற்கான திட்டத்தை கேரளா பெற்றுள்ளது.

இதனை அடுத்து சொந்தமாக இணையதள சேவை வைத்திருக்கும் முதல் மற்றும் ஒரே மாநிலமாக கேரள மாநிலம் திகழ்கிறது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

சொகுசுக்கப்பலில் இதெல்லாமா இருக்கும்? பயமுறுத்தும் முன்னாள் கப்பல் ஊழியர்!

கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட்

கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட்

கேரளாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் இணைய வசதி அளிக்க வேண்டுமென்ற கேரள அரசாங்கத்தின் லட்சிய திட்டமான கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் என்ற தொலை தொடர்புத் துறையிடம் இருந்து இணைய சேவையை வழங்க உரிமம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் கேரளா தான் முதல் முதலாக தனது சொந்த இணைய சேவையை கொண்ட மாநிலமாக திகழ்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

KFON திட்டம்
 

KFON திட்டம்

கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் தொலைதொடர்பு துறையில் இருந்து இணைய சேவை வழங்கும் உரிமையை பெற்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் KFON என்ற மதிப்பு மிகுந்த திட்டம் மக்களுக்கு இணையதள சேவையை மாநில உரிமையுடன் வழங்கும் சேவையாக செயல்படுகிறது என்றும் இந்த செயல்பாடுகளை இன்னும் வேகப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்களுக்கு இலவச இண்டர்நெட்

அரசு அலுவலகங்களுக்கு இலவச இண்டர்நெட்

இந்த லட்சிய திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் இணையதளம் மிக எளிமையாக சென்று சேரும் என்றும் அதுமட்டுமின்றி 30 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதளத்தை கேரள அரசு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

KFON திட்டம்

KFON திட்டம்

முந்தைய இடதுசாரி அரசாங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு KFON என்ற திட்டத்தை அறிமுகம் செய்து இணைய இணைப்பின் அடிப்படை உரிமைக்காக ரூ.1548 கோடியில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

சொந்த இணையதள சேவை

சொந்த இணையதள சேவை

இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கொண்டு சென்றுள்ளார் என்று சொல்லலாம். இந்தியாவிலேயே சொந்த இணைய சேவை வைத்துள்ள ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரள முதல்வர் கொண்டு வந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kerala becomes first state to have own internet service

Kerala becomes first state to have own internet service | சொந்தமாக இண்டர்நெட் சேவை… இந்தியாவிலேயே முதல் மாநிலம் இதுதான்

Story first published: Friday, July 15, 2022, 15:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.