டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என, அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் பாதுகாப்பான நாடாகவும், துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான சட்டங்களை கடைபிடிக்கும் ஜப்பானில் நடந்த இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று கூறியதாவது:தேசிய பொது பாதுகாப்பு கமிஷன் மற்றும் தேசிய போலீசார் இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரித்து வருகின்றனர். எங்கு தவறு நடந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. விரிவான ஆய்வு நடத்தி தவறுகள் களையப்பட வேண்டும். ஷின்சோவுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடே மரணத்துக்கு காரணம் என நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement