நேரம் பார்த்து காய் நகர்த்தும் ரூ.85,000 கோடி நிறுவனம்.. பங்கு முதலீட்டாளர்கள் உஷார்..!

அமெரிக்கா மற்றும் இந்திய பணவீக்க தரவுகள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய வங்கிகள் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவின் பணவீக்கம் 41 வருட உச்சத்தில் இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்தால் கூட வட்டியை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் மத்திய வங்கி பெடரல் ரிசர்வ் இதற்கு முன்பு அறிவிக்க வட்டி உயர்வின் மூலம் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேறி நாட்டின் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கூடச் சரிவடைந்துள்ளது.

இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..?

இந்தச் சரிவை வாய்ப்பாகப் பயன்படுத்த முடிவு செய்து நேரம் பார்த்து காய் நகர்த்துகிறது ரூ.85,000 கோடி நிறுவனம்.

பஜாஜ் அலையன்ஸ்

பஜாஜ் அலையன்ஸ்

பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ள நிலையில், Overpriced அல்லது Overvalution பிரச்சனைகள் பல நிறுவன பங்குகளில் குறைந்துள்ளது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்த பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் முடிவு செய்து தனது பண இருப்பைப் பெரிய அளவில் இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளது.

85,000 கோடி ரூபாய்

85,000 கோடி ரூபாய்

சுமார் 85,000 கோடி ரூபாய் ($11 பில்லியன்) சொத்துக்களைக் கொண்ட பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், கடந்த மூன்று மாதங்களில் தனது பண இருப்பு அளவை 300 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 3 சதவீதம் வரையில் குறைத்துள்ளது.

முதலீடு
 

முதலீடு

பங்குசந்தை வர்த்தகம் மந்தமாக இருக்கும் போதும், குறைந்த விலையில் இருக்கும் போது அதிகளவில் வாங்கிக் குவிக்கத் தனது பண இருப்பைப் பயன்படுத்த துவங்கியுள்ளது பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம். பஜாஜ் அலையன்ஸ் சுமார் 11 பில்லியன் டாலர் அதாவது 85,000 கோடி ரூபாய் சொத்துக்களை வைத்து நிர்வாகம் செய்து வருகிறது.

 பணக் கையிருப்பு

பணக் கையிருப்பு

மேலும் மீதமுள்ள பணக் கையிருப்புகளை வரும் மாதங்களில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் பஜாஜ் அலையன்ஸின் தலைமை முதலீட்டு அதிகாரி சம்பத் ரெட்டி கூறியுள்ளார். இதனால் அன்னிய முதலீடுகளின் வெளியேற்றம் ஏற்படும் சரிவு கணிசமான குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஃப்டி 50 14% சரிவு

நிஃப்டி 50 14% சரிவு

இந்தியாவின் என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டு எண், பணவீக்கம், பணவியல் கொள்கையின் தளர்வுகள் குறைப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளரின் தொடர் பங்கு விற்பனை மூலம் அக்டோபரில் தொட்ட வரலாற்று உச்சத்தில் இருந்து 14% சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bajaj Allianz Life Insurance investing in Indian equity market to utilize the fall

Bajaj Allianz Life Insurance investing in Indian equity market to utilize the fall நேரம் பார்த்து காய் நகர்த்தும் ரூ.85,000 கோடி நிறுவனம்.. பங்கு முதலீட்டாளர்கள் உஷார்..!

Story first published: Friday, July 15, 2022, 13:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.