பள்ளி மாணவா்கள் இவைகளை அணிந்து வரத் தடை.. நிபந்தனைகளை விதித்த அரசு !!

பள்ளி மாணவா்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் கைகளில் சாதி கயிறு கட்டிக்கொண்டு வருகின்றனர். தலைமுடியை நீளமாக வளர்க்கின்றனர் போன்ற புகார்கள் உள்ளன. இதனால் மாணவர்கள் ஒழுக்கம் தவறுவதுடன் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இது தொடா்பாக, சமூக பாதுகாப்பு துறை சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்; தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும்; காலில் காலணி அணிந்து வருவது அவசியம். பெற்றோா் கையொப்பத்துடன் வகுப்பாசிரியா் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும். பிறந்த நாள் என்றாலும் மாணவி, மாணவிகள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும். மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனம், கைப்பேசி கொண்டு வர அனுமதி இல்லை.

dsf

அடிக்கடி கை, கால்களை கழுவ வேண்டும். மாணவ, மாணவிகள் போதை பொருள்களை பயன்படுத்த கூடாது மற்றும் எந்தவொரு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. மாணவா்கள் பள்ளிக்கு செல்லும் போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் எதுவும் அணிய கூடாது உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவியா்களிடம் நீதிநெறி கதைகள், தெனாலிராமன் கதைகள், காப்பிய கதைகள், சுதந்திர போராட்ட வீரா்களின் கதைகள் உள்ளிட்ட நல்லொழுக்க கதைகளை எடுத்துரைக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் அமைதி கலாசாரத்தை ஊக்குவித்தல், மாணவ, மாணவிகளிடையே சுற்றுச்சூழல், குடும்ப உறவுமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

newstm.in
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.