ரஷ்யாவின் மிகப்பிரபலமான குறி சொல்பவர் பாபா வங்காவின் 2022 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில் இரண்டு ஏற்கனவே நிறைவேறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யரான பாபா வங்காவின் இதுவரையான கணிப்புகள் பல நிறைவேறியுள்ளன. குறிப்பாக 2022ம் ஆண்டில் அவர் குறிப்பிட்டிருந்த 6 முக்கிய கணிப்புகளில் தற்போது இரண்டு நிறைவேறியுள்ளது.
2022ல் ஆசிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு ஏற்படும் என பாபா வங்கா குறிப்பிட்டிருந்தார்.
அதுபோலவே இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டது.
மட்டுமின்றி, வறட்சியின் விளைவாக நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா குறிப்பிட்டிருந்தார்.
தற்போது ஐரோப்பாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர்த்துகல் தங்கள் குடிமக்களிடம் தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இத்தாலி 1950 களுக்கு பின்னர் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த ஆண்டில் நடைபெறும் என பாபா வங்கா குறிப்பிட்ட இரு கணிப்புகள் நிறைவேறியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்த ஆண்டில் நிறைவேறும் என பாபா வங்கா குறிப்பிட்ட கணிப்புகளில் சைபீரியாவில் இருந்து உருவாகும் கொடிய வைரஸ், வெட்டுக்கிளி படையெடுப்பு மற்றும் virtual reality பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவைகளை குறிப்பிட்டிருந்தார்.
1911ல் பிறந்த பாபா வங்கா 1996ல் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். இருப்பினும் இதுவரை அவர் குறிப்பிட்டுள்ள கணிப்புகளால் ஆண்டு தோறும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.