இந்நிய நுகர்வோர் சந்தையில் பிஸ்கட் மிகப்பெரிய அங்கம் வகிக்கிறது என்றால் மிகையில்லை. எத்தனையோ பிராண்ட் பிஸ்கட் வந்தாலும், பல கோடி மக்களின் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றால் அது ஒரேயொரு பிராண்டு தான் பார்லே ஜி.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் பார்லேஜி-யை சாப்பிடாமல் இருந்தவர்களே இருக்க முடியாத அளவிற்கு இந்தியர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியதுள்ளது பார்லேஜி. இதுமட்டும் அல்லாமல் போர், வறுமை, வெள்ளம் போன்ற அனைத்து முக்கியமான காலத்திலும் மக்களின் முக்கிய உணவாக இருந்தது பார்லே-ஜி பிஸ்கட் தான்.
இப்படிப் பல பெருமைக்குச் சொந்தமான பார்லே-ஜி பிஸ்கட் யார், எப்போது உருவாக்கினார்கள் தெரியுமா..?
கூகுள்-க்கே இந்த நிலைமையா.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் டெக் உலகமே அதிர்ந்தது..!
2ஆம் உலகப் போர்
பார்லே பிஸ்கட் முதன் முதலில் 1939ஆம் ஆண்டு 2ஆம் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்டது. ஒருபக்கம் மக்கள் வறுமையிலும் பசியில் இருக்கும் போது இந்தப் பார்லே பிஸ்கட் குறைந்த விலையில் கிடைப்பதாலேயே பெரிய அளவில் பிரபலமாகி அதிகளவில் விற்பனை ஆனது.
1980ல் முக்கிய மாற்றம்
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் போலவே சில தடுமாற்றங்கள் இருந்தாலும் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்று வந்த நிலையில் 1980ல் முக்கியமான மாற்றத்தை எதிர்கொண்டது. வர்த்தகச் சந்தைக்கு ஏற்ப நிறுவனத்தின் யுக்தியும் மாறியது.
இளம் தலைமுறையினர்
பார்லே பிஸ்கட் முதலில் பெரியவர்கள் மட்டுமே சாப்பிட்டு வந்த நிலையில், இளம் தலைமுறையினரை ஈர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் பார்லே பிக்ஸ்ட், பார்லே -ஜி பிஸ்கட் ஆக மாறியது.
ஜி – குல்கோஸ்
முதலில் இந்த ஜி என்பது குல்கோஸ்-ஐ குறித்தும் எழுத்தாகவே அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இளம் தலைமுறையினரிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஜி – குல்கோஸ் என்பதை ஜீனியஸ் ஆக மாற்றியது.
பார்லே – ஜி
இதுமட்டும் அல்லாமல் பார்லே – ஜி, G for Genius என்பதை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டத்தை இந்தியா முழுவதும் கைப்பற்றி இன்று வரையில் யாராலும் அசைக்க முடியாத பிராண்டாக உருவெடுத்துள்ளது.
5000 கோடி ரூபாய்
இதுமட்டும் அல்லாமல் 2013 ஆம் ஆண்டில் இந்திய ரீடைல் சந்தையில் முதல் முறையாக 5000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது. இதன் பின்பு தான் பிற FMCG பிரண்டுகள் 5000 கோடி ரூபாய் அளவை எட்டி தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
400 மில்லியன் பார்லே-ஜி பிஸ்கட்
பார்லே நிறுவனம் தினமும் 400 மில்லியன் பார்லே-ஜி பிஸ்கட்-ஐ தயாரித்து வருகிறது. இதில் என்ன பெரிய விஷயம் என்று தானே கேட்குறீங்க முன்னணி சமூகவலைத்தள நிறுவனமான டிவிட்டர் உலகளவில் 450 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே வைத்துள்ளது. வித்தியாசம் புரியும் என நம்புகிறேன்.
பூமி – நிலா தொலைவு
பார்லே நிறுவனம் ஒரு மாத தயாரிக்கும் பார்லே ஜி பிஸ்கட்-ஐ ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் பூமியில் இருந்து நிலா-வை எட்ட முடியும். பூமிக்கும் நிலவுக்கும் மத்தியில் 7.25 லட்சம் கிலோமீட்டர் தொலை இடைவெளி உள்ளது.
83 ஆண்டுகள்
பார்லே 1939 ஆம் ஆண்டு முதல் இந்த உன்னதமான பிஸ்கட்களைத் தயாரித்து வருகிறது. அதாவது 83 ஆண்டுகளுக்கும் மேலாக இது தேசத்தின் மற்றும் உலகத்தின் சுவையாக விளங்குவது மட்டும் அல்லாமல் இன்றளவும் அதிகப்படியான பிஸ்கட் சந்தை வர்த்தகத்தைத் தன்னுள் வைத்துள்ளது.
50 பைசா
இதேபோல் 14 ஆண்டுகளாக, பார்லே தனது பிஸ்கட் விலையை உயர்த்தவில்லை. அப்படி முதல் முறையாக விலையை உயர்த்திய போது வெறும் 50 பைசா மட்டுமே உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இன்று 50 கிராம் பார்லே-ஜி பிஸ்கட் விலை 5 ரூபாய், 200 கிராம் பார்லே-ஜி பிஸ்கட் விலை 25 ரூபாய், 800 கிராம் பார்லே-ஜி பிஸ்கட் விலை 5 ரூபாய்.
சீனா
சீனாவில் விற்கப்படும் அனைத்துப் பிஸ்கட் பிராண்டுகளையும் விடப் பார்லே ஜி அதிகப் பிஸ்கட்களை விற்பனை செய்கிறது. உங்களை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு உண்மை – உலகளாவிய பிஸ்கட் நுகர்வு அளவில் சீனா 4வது இடத்தில் உள்ளது.
தலைகீழாக மாறும் கோயம்புத்தூர்.. இனி இதுதான் நிரந்தரம்..?!
Parle G: Unknown and astonishing facts
Parle G: Unknown and astonishing facts பார்லே-ஜி உருவானது எப்போ, எப்படி..? அட இது தெரியாம போச்சே..!