சென்னை: நடிகை ராதிகாவின் முன்னாள் கணவரும், பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் இன்று சென்னையிலுள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது வயது 70.
1952 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் வணிகக் குடும்பத்தில் பிறந்த பிரதாப் போத்தன், ஐந்து வயதில் ஊட்டியில் உள்ள உறைவிடப் பள்ளிக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்தார், அங்கு ஓவியம் வரைந்தார். அவருக்கு 15 வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்தார், பின்னர் கல்லூரி கல்வியை சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். அவரது நண்பர்கள் அவருக்கு நாடகங்களில் நடிக்க உதவினர். இதைத்தொடர்ந்து, அவர் திரையுலகில் கால் பதித்தார்.
வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.