உலகின் மிக்பெரிய கோடீஸ்வரரான பில் கேட்ஸ் தனது சொத்தில் பெரும் பகுதியை மீண்டும் நன்கொடை உறுதியளித்துள்ளார், இதன் மூலம் பில் கேட்ஸ் நீண்ட காலமாகக் கட்டியாண்ட உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற உள்ளார்.
பெரும் பணக்காரர்கள் தங்கள் சம்பாதித்த பணத்தைப் பல்வேறு நல திட்டங்களுக்கு நன்கொடை அளிப்பது வழக்கம், ஆனால் பில் கேட்ஸ் மைரோசாப்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியில் சம்பாதித்த பணத்தில் அதிகப்படியான தொகையை நன்கொடை அளித்தார்.
இவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் மற்றொரு பெரும் பணக்காரர் ஆன வாரன் பபெட்-ம் அதிகப்படியான தொகையை நன்கொடையாகக் கொடுத்தார். இந்நிலையில் பில் கேட்ஸ் 2வது முறையாகப் பெரும் தொகையை நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளார்.
அசிங்கப்படும் பில் கேட்ஸ்: பெண் ஊழியருடன் தவறான உறவு, பாலியல் குற்றவாளி உடன் தொடர்பு, இன்னும் பல!!
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் தனது நன்கொடை நிறுவனமான பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான தொகையை நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். உலகின் நான்காவது பெரும் பணக்காரர் ஆக இருக்கும் பில் கேட்ஸ் தனது வளங்களைச் சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய “கடமை” இருப்பதாகக் கூறினார்.
118 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு
பில் கேட்ஸ் முதன்முதலில் 2010 இல் தனது செல்வத்தின் பெரும் பகுதியை மக்களுக்கும், சமூகத்திற்கும் உதவிடும் வகையில் நன்கொடை வழங்குவதாக உறுதியளித்தார், ஆனால் அதன் பிறகு அவரது நிகர மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, அவர் தற்போது பில் கேட்ஸ்-ன் மொத்த சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலர்.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை
இந்நிலையில் 2000 ஆம் ஆண்டில் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா உடன் இணைந்து அமைத்த அறக்கட்டளையான பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குத் தற்போது அறிவித்துள்ள 20 பில்லியன் டாலர் நன்கொடை அளித்த பிறகு பில் கேட்ஸ்-ன் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலருக்குக் கீழ் குறைந்து பணக்காரர்கள் பட்டியலில் வெளியேறும் நிலை வரலாம்.
பில் கேட்ஸ், வாரன் பபெட்
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குப் பில் கேட்ஸ் 1994ல் இருந்து சுமார் 39 பில்லியன் டாலர் அளவிலான தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இதேபோல் கேட்ஸ் பவுண்டேஷனுக்கு வாரன் பபெட் 2006ஆம் ஆண்டு முதல் 35.7 பில்லியன் டாலர் அளவிலான தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
9 பில்லியன் டாலர்
இந்தப் புதிய நன்கொடை மூலம் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தற்போது வருடத்திற்கு 6 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவு செய்து வரும் நிலையில் 2026 முதல் 9 பில்லியன் டாலர் வரையில் செலவு செய்யும், உலக நாடுகள் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்தக் கூடுதல் நிதி பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
அம்பானி, அதானி
பில் கேட்ஸ் தனது சொத்து மதிப்பில் 20 பில்லியன் டாலர் நன்கொடை அளிக்கும் நிலையில் அவரது மொத்த சொத்து மதிப்பில் பெரிய சரிவு ஏற்படும். இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி டாப் 5 இடங்களுக்குள் வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
எலான் மஸ்க்-கிற்கு குழிபறிக்கும் பில் கேட்ஸ்..!
Bill Gates announced new 20 billion dollar donation; May drop off from top 10 world’s rich list
Bill Gates announced new 20 billion dollar donation; May drop off from top 10 world’s rich list பில் கேட்ஸ் திடீர் முடிவு.. உலகின் டாப் 10 பில்லியனர்கள் வியப்பு.. அம்பானி, அதானி ஜாலி..!