சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு அனைத்து வங்கிகளும் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதை பார்த்தோம்.
அதேபோல் ஐசிஐசிஐ வங்கியும் ரூபாய் 2 கோடி வரை பிக்சட் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை சமீபத்தில் உயர்த்தியது.
இந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் ஜூலை 11 முதல் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ரெப்போ
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் மற்றும் 50 புள்ளிகள் என அடுத்தடுத்து 90 புள்ளிகள் வரை உயர்த்தியது. இதனை அடுத்து அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தின என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ஐசிஐசிஐ வங்கி
அந்த வகையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதம் ரூபாய் 2 கோடி வரை பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்த நிலையில் தற்போது 2 கோடிக்கு மேல் 5 கோடி வரை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
பிக்சட் டெபாசிட்
இந்த வட்டி விகித உயர்வு பிக்சட் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை, மியூட்சுவல் பண்ட் உள்பட பல்வேறு முதலீடுகளில் ரிஸ்க் இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் தற்போது வட்டி உயர்ந்துள்ளதால் பிக்சட் டெபாசிட்டில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர்.
புதிய வட்டி விகிதம்
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, 2 கோடிக்கு மேல் 5 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு புதிய வட்டி விகிதங்களை ஜூலை 11 முதல் மாற்றியுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
7 – 14 நாட்கள் வரை: 3.10 சதவீதம் ; மூத்த குடிமக்களுக்கு – 3.10 சதவீதம்
15 – 29 நாட்கள் வரை: 3.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.10 சதவீதம்
30 – 45 நாட்கள் வரை: 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.25 சதவீதம்
46 – 60 நாட்கள் வரை: 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
61 – 90 நாட்கள் வரை: 4.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.00 சதவீதம்
91 – 120 நாட்கள் வரை: 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.75 சதவீதம்
121 – 150 நாட்கள் வரை: 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.75 சதவீதம்
151 – 184 நாட்கள் வரை: 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.75 சதவீதம்
185 – 210 நாட்கள் வரை: 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.25 சதவீதம்
211 – 270 நாட்கள் வரை: 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.25 சதவீதம்
271 – 289 நாட்கள் வரை: 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.35 சதவீதம்
290 – 1 வருடம் வரை: 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.35 சதவீதம்
1 – 389 நாட்கள் வரை: 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.60 சதவீதம்
390 – 15 மாதங்கள் வரை: 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.60 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.75 சதவீதம்
18 – 2 ஆண்டுகள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.75 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.75 சதவீதம்
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.75 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.75 சதவீதம்
மூத்த குடிமக்கள்
ரூ.2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களை விட 0.50 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்ட நிலையில் ரூ.2 கோடிக்கு மேல் பிக்சட் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு உரிய வட்டி விகிதமே அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ICICI Bank Hikes Fixed Deposit Interest Rates. Check New Rates Here
ICICI Bank Hikes Fixed Deposit Interest Rates. Check New Rates Here | மீண்டும் வட்டி உயர்வு.. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!