Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீக காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாக பார்த்து விடையைத் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சளிக்காமல் சுவாரசியமாக இருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் விடையை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று தோன்றும். ஆனால், பார்க்க பார்க்க குழப்பம்தான் மிஞ்சும். இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் மலைத்துப் போவீர்கள்.
அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகளுக்கு நடுவே ஒரு பாண்ட கரடி மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ‘பாஸ்’. ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த புதிர் சற்று கடினமானது. ஆனால், நிதானமாகப் பார்த்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் தான் இந்த படத்தையும் வரைந்துள்ளார். கலர் கலரான யானை முகங்களுக்கு நடுவே ஒரு பாண்டா கரடியை மறைத்து வைத்துள்ளார். அந்த பாண்டா கரடியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். கடினமான இந்த புதிருக்கு விடையைக் கண்டுபிடித்துவிட்டால், தலைமைப் பண்பு உள்ள நீங்கள்தான் ‘பாஸ்’.
என்ன பாண்டாவை ஒரே பார்வையில் கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்தால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.
பாண்டா வெள்ளை நிறத்தில் இருக்கிறது. இப்போது படத்தை நன்றாகப் பார்த்து பாண்டாவைத் தேடுங்கள்.
இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், மேலும் ஒரு குறிப்பு தருகிறோம். பாண்டா வலது பக்கம் மறைந்திருக்கிறது. இப்போது முயற்சி செய்து பாருங்கள்.
இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாண்டா எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“