முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பரோலில் வெளியே வந்த ரவிச்சந்திரனுக்கு, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தற்போது மேலும் 30 நாள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன், தனக்கு உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட இருப்பதாகக் கூறி அதனால் தனக்கு சிகிச்சை மேற்கொள்ளவும் மற்றும் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும் கடந்த வருடம் `30 நாள் பரோல்’ கேட்டு என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோரியிருந்தார். நீதிமன்றம் அதற்கு அனுமதித்தது. அந்த உத்தரவின் பேரில் தமிழக அரசிற்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் தமிழக அரசு அனுமதியோடு, கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி 30 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார் ரவிச்சந்திரன். இந்த நிலையில் தனது உடல்நிலை கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் மேலும் தாய்க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிற்கு அவர் பிடித்த கோரிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. அதில் தற்போது ஒன்பதாவது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
– செய்தியாளர் நாகேந்திரன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM