Xiaomi Smart Speaker Price: IR கன்ட்ரோல் கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கரை சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை ரூ.5,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சலுகை விலையில் ரூ.4,999க்கு இதனை பயனர்கள் வாங்க முடியும். சியோமி இந்தியா தளத்தில் இந்த ஸ்மார்ட் ஸ்பிக்கர் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் உள்ள IR டிரான்ஸ்மிட்டர் ஹோம் அப்ளையன்ஸ்களுக்கு வாய்ஸ் ரிமோட் கன்ட்ரோலாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கரில் உள்ள இன்பில்ட் IR (Infrared Rays) டிரான்ஸ்மிட்டர் மூலம் கூகுள் அசிஸ்டன்ட் துணை கொண்டு குரல் மூலம் Non-ஸ்மார்ட் டிவைஸ்களையும் கன்ட்ரோல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்பீக்கர் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதில் டிஜிட்டல் கடிகாரமும் இடம் பெற்றுள்ளது. இதன் பிரைட்னஸ் லெவல் தானாகவே அட்ஜெஸ்ட் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடலை அலாரமாக வைக்கும் வசதியும் இதிலுள்ளது.