வளர்ப்பு மகளுடன் ரகசிய உறவு; எரோல் மஸ்க் கொடுத்த அதிர்ச்சித் தகவல்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலோன் மஸ்க்கின் 76 வயதான தந்தை எரோல் மஸ்க் (Errol Musk) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் எலோன் மஸ்க் நிறுவனத்தின் ஊழியருடன் தனக்கு இருந்த தொடர்பை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட நிலையில், அவரது தந்தை தற்போது, தனது வளர்ப்பு மகளுடன் தொடர்பு வைத்திருந்ததை வெளிப்படுத்தியுள்ளது புயலை கிளப்பியுள்ளது. இதுமட்டுமின்றி, தனது மனைவியின் 35 வயது மகளான ஜனா பெசூடென்ஹவுட் (Jana Bezuidenhout) என்ற தனது வளர்ப்பு மகளுடன் ஏற்பட்ட ரகசிய உறவின் காரணமாக இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாவதாக இன்னொரு குழந்தையும் பிறந்துள்ளது.

வளர்ப்பு மகள் ஜனாவிற்கும், எரோல் மஸ்கிற்கும், 2017ம் ஆண்டில் முதல் குழந்தையான எலியட் பிறந்துள்ளது. இப்போது அந்த குழந்தைக்க்கு 5 வயதாகிறது. இதற்குப் பிறகு இவர்களுக்கு 2019அ ஆண்டில் மற்றொரு குழந்தை பிறந்ததாகவும், எரோல் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், எரோல் மஸ்கின் மகனும் உலக பணக்காரர்களில் ஒரிவரான எலோன் மஸ்க் (Elon Musk) நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடனான உறவு குறித்து வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. எலோன் மஸ்க் 10 குழந்தைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே… இது உலகின் கொலைகார தோட்டம்

தனது வளர்ப்பு மகளுடனான ரகசிய உறவை வெளிப்படுத்திய எரோல் மஸ்க், எங்களுக்குள் 41 வருட வித்தியாசம் உள்ளது என்றார். அவள் எப்போது வேண்டுமானாலும் என்னுடன் வந்த தங்கலாம் எனவும் கூறினார். எரோல் மஸ்க் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் வசிக்கிறார், அவரும் எலான் மஸ்கைப் போலவே பெரும் பணக்கார தொழிலதிபர். அவர் 1970 இல் மாடல் மேய் ஹால்டிமேன் மஸ்க்கை முதலில் மணந்தார், அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். எலோன் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டோஸ்கா மஸ்க் ஆகியயோர் தான் அந்த மூன்று குழந்தைகள். இந்நிலையில், எலோன் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் மற்றும் ஜனாவின் தாயார் 18 வருடங்கள் ஒன்றாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட விவாகரத்துக்கான காரணம், எரோலுக்கும் ஜனாவிற்கும் இடையிலான தொடர்பு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Viral News: வயிற்றில் இருந்த ஆணி, பேட்டரி, நாணயங்கள்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.