விமானத்தில் இருந்த ஒரு இளம்பெண்ணுக்காக மொத்தமாக கீழே இறக்கப்பட்ட பயணிகள்! காரணம் இதுதான்


அமெரிக்காவில் விமானத்தில் இருந்து கீழே இறங்க மறுத்த இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மியாமியில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற வேண்டிய Skylar Shiffon Pollard (29) என்ற பெண் தாமதமாக வந்த நிலையில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி மூடப்பட்டது.

Skylar போர்டிங் பாதுகாப்பு நடைமுறைகளை புறக்கணித்து, தாமதமாக வந்த போதிலும் விமானத்தில் ஏறினார்.
ஊழியர்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கி Skylarயிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டபோது, ​​அதை செய்ய மறுத்துவிட்டார்.

விமானத்தில் இருந்த ஒரு இளம்பெண்ணுக்காக மொத்தமாக கீழே இறக்கப்பட்ட பயணிகள்! காரணம் இதுதான் | Usa Women Refusing To Leave Plane Arrested

wflanews.iheart

இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக பொலிசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் Skylar-ஐ விமானத்தில் இருந்து இறங்க சொல்லியும் அவர் மறுத்திருக்கிறார்.

அத்துமீறல் தொடர்பான எச்சரிக்கை வழங்கப்பட்ட போதும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.
பின்னர் Skylar-ஐ கைது செய்தனர்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் விமான நிலைய திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்தியது என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.