மும்பை: பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் தற்காப்புக்கலை பயின்றவர் மட்டுமின்றி மாடலாகவும் இருக்கிறார். தமிழில் அஜித் குமாருடன் ‘பில்லா 2’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’, சூர்யாவுடன் ‘அஞ்சான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், வித்யூத் ஜம்வாலுக்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கும், பாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் நந்திதா மஹ்தானிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமீபத்தில் வித்யூத் ஜம்வால், நந்திதா மஹ்தானி ஜோடி தாஜ்மகாலுக்கு சென்றிருந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் நந்திதா மஹ்தானியின் கைவிரலில் நிச்சயதார்த்த மோதிரம் காணப்பட்டது. இதையடுத்து வித்யூத் ஜம்வால், நந்திதா மஹ்தானி திருமணம் இம்மாதம் லண்டனில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. நந்திதா மஹ்தானி ஏற்கனவே பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து, பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.