கோடையில் விஷப்பூச்சிகள் தாக்கம் அதிகமாக இருக்கும்.
விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் நாம் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
இல்லை என்றால் ஒரு சில எளிய இயற்கை வழிமுறைகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- தேள் கொட்டினால்: எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
- கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.
- சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
- நல்ல பாம்பு கடிக்கு வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு கொடுக்கவும்
- வண்டு கடிக்கு
கார வெற்றிலை எடுத்து, 8 மிளகு சேர்த்துக் உண்ண கொடுக்கவும். - பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
குப்பைமேனி இலையையும், உப்பையும் சமமாக வைத்து சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூரான் கடித்த இடத்தில் இதனை பூசி விட்டு நான்கு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். உடல்முழுவதும் தடிப்பு காணப்பட்டால் இதனை உடல்முழுவதும் பூசி குளிக்க வேண்டும்.