15 மாத சரிவில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்குவது சரியா..?

சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தம் அதாவது 20 வருட உயர்வில் இருக்கும் அமெரிக்க டாலருக்கு எதிராகத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை 15 மாதங்களில் குறைந்த அளவை எட்டியது. வெள்ளியும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது.

இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..?

கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை 8 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் வெள்ளியின் விலை கடந்த மாதத்தில் 17 சதவீதம் குறைந்துள்ளது.

 பணவீக்க தரவுகள்

பணவீக்க தரவுகள்

அமெரிக்கா மற்றும் இந்தியப் பணவீக்க தரவுகள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய வங்கிகள் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா அடுத்த சில நாட்களில் தனது நாணய கொள்கை கூட்டம் நடத்த உள்ள நிலையில் முதலில் வட்டியை உயர்த்துவது அமெரிக்காவாகத் தான் இருக்கும்.

41 வருட உச்சம்

41 வருட உச்சம்

குறிப்பாக அமெரிக்காவின் பணவீக்கம் 41 வருட உச்சத்தில் இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்தால் கூட வட்டியை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்த வட்டி உயர்வின் மூலம் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்கும்.

 அன்னிய முதலீடுகள்
 

அன்னிய முதலீடுகள்

அமெரிக்காவின் மத்திய வங்கி பெடரல் ரிசர்வ் இதற்கு முன்பு அறிவித்த வட்டி உயர்வின் மூலம் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேறி நாட்டின் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கூடச் சரிவடைந்துள்ளது. இதேவேளையில் தங்கத்தின் மீதான முதலீடும் சரிந்துள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது, இதேவேளையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதனால் தங்கம் விலை அதிகரிக்கும் என்பதால் தங்கம் விலை அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

MCX சந்தை

MCX சந்தை

MCX சந்தையில் தங்கம் ஆகஸ்ட் ப்யூச்சர்ஸ் 0.32 சதவீதம் சரிந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 50,069 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது. வெள்ளியின் விலை கடந்த எண்ணிக்கையில் அரை சதவீதம் குறைந்து கிலோவுக்கு ரூ.54,780 ஆக இருந்தது.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

இதேபோல் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1716 டாலராக இருந்த நிலையில், தற்போது 1702 டாலராகச் சரிந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தும் அச்சத்தால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்கம் வாங்குவது சரியா..?

தங்கம் வாங்குவது சரியா..?

ரீடைல் சந்தையில் தங்கம் மீதான வரி, டாலர் மதிப்பின் சரிவின் பாதிப்புகள் இருக்கும் நிலையில் அமெரிக்கா மத்திய வங்கி வட்டியை குறைத்த பின்பு வாங்கினால் கூடுதலான லாபம் கிடைக்கும் எனக் கணிக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை 15 மாத சரிவில் இருப்பதால் சாமானிய மக்களுக்கு லாபம் தான், ஆனால் கூடுதல் நன்மை பெற காத்திருப்பது உத்தமம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold Price today July 15 hits 15 months low; Global gold Market falls to 1702 USD

Gold Price today July 15 hits 15 months low; Global gold Market falls to 1702 USD 15 மாத சரிவில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்குவது சரியா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.