அமெரிக்காவுக்காக பணிபுரியும் இந்திய தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் அமெரிக்காவுக்காக பணி புரிவதாகவும் அவர்களின் சராசரி சம்பளம் 85 லட்ச ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு இந்திய தொழில்நுட்ப துறை ஒரு விதத்தில் உதவி செய்து வருகின்றன என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
207,000 ஐடி ஊழியர்கள்
இந்திய தொழில்நுட்ப துறையில் கடந்த ஆண்டு அமெரிக்காவில் 207,000 பேர் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டதாக நாஸ்காம் அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களுக்கான சராசரி ஊதியம் 2021ஆம் ஆண்டு $106,360 என்றும் இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 85 லட்ச ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பொருளாதாரம்
இந்திய தொழில்நுட்பத் துறையின் நேரடித் தாக்கம் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் மொத்தம் 396 பில்லியன் டாலர் விற்பனையை உருவாக்க உதவியுள்ளது. 1.6 மில்லியன் வேலைகளை இந்திய தொழில்நுட்ப துறை செய்வதால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு $198 பில்லியனுக்கும் அதிகமாக பெற்றுள்ளது. இது 2021ஆம் ஆண்டு 20 அமெரிக்க மாநிலங்களின் ஒருங்கிணைந்த பொருளாதாரங்களை விட அதிகமான தொகை ஆகும்.
500 நிறுவனங்கள்
“இந்திய தொழில்நுட்ப துறையில் நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் உள்ள 500 நிறுவனங்களில் 75% க்கும் அதிகமான நிறுவனங்களுடன் வேலை செய்கிறது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளன. எனவே டிஜிட்டல் யுகத்தின் முக்கியமான சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை சந்திப்பதற்கும் நன்கு தயாராக உள்ளன” என்று நாஸ்காம் தலைவர் டெப்ஜானி கோஷ் கூறியுள்ளார்.
$1.1 பில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பு
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் $1.1 பில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பை அளித்துள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள 180 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள் மற்றும் பிறவற்றுடன் கூட்டணிகளை உருவாக்கியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாஸ்காம் தலைவர்
உள்ளூர் முதலீடுகள், தொழிலாளர் சக்தியை அதிகரித்தல், மற்றும் உள்ளூர் பணியாளர்களுக்கு திறன் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் இந்திய தொழில்நுட்ப துறை அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்புகளை செய்கிறது என்று நாஸ்காம் தலைவர் கோஷ் கூறினார்.
Indian Tech Industry Employed 2.07 lakh People in USA says Nasscom Report
Indian Tech Industry Employed 2.07 lakh People in USA in last year says Nasscom Report | 2 லட்சம் ஐடி பணியாளர்கள், லட்சக்கணக்கில் சம்பளம்.. அமெரிக்காவை வாழ வைக்கும் இந்தியர்கள்..