Canon Selfy CP1500 Features: கேனான் நிறுவனத்தின் வயர்லெஸ் கச்சிதமான புகைப்பட அச்சுப்பொறியான செல்ஃபி CP1500-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்கள் புகைப்படங்களை உடனடியாக அச்சிடுகிறது.
புதிய கேனான் காம்பேக்ட் பிரிண்டர் உயர்தர புகைப்படங்களை வழங்குகிறது. பெரும்பாலும் பயணம் செய்பவர்களுக்கும், ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்து புகைப்படங்களாக உடனடியாக அச்சிட விரும்புவோருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Canon Selfy CP1500 விலை ரூ.11,995 ஆக இந்தியாவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிரிண்டர் கருப்பு, வெள்ளை என இரு நிறத் தேர்வுகளில் கிடைக்கிறது. செப்டம்பர் முதல் பிரிண்டர் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகிறது.
பொதுவாக திருமண வீடுகளில், சில நெருங்கிய உறவினர்கள் உடனடியாக புகைப்படம் வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்தவகையில், இந்த பிரிண்டர் பல ரீதியில் பயனுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
கேனான் செல்ஃபி சிபி1500 அம்சங்கள் – Canon Selfy CP1500 Features
Canon CP1500 Wi-Fi இணைப்பு, USB டைப்-சி ஆதரவுடன் வருகிறது. இதற்கான கேபிளும் உடன் வழங்கப்படுகிறது. இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் கேமரா, கணினி அல்லது நேரடியாக SD கார்டு அல்லது USB ஃபிளாஷ் டிரைவ் மூலம் புகைப்படங்களை அச்சிட அனுமதிக்கிறது.
காம்பேக்ட் பிரிண்டரில் தானியங்கி திருத்தம் செயல்பாடு உள்ளது. இது புகைப்படங்களின் பிரகாசம், மாறுபாடு, செறிவு என அனைத்தையும் தானாக சரிசெய்கிறது. இதற்கென ஒரு பிரத்யேக ஸ்மார்ட்போன் செயலி இதில் உட்படுத்தப்பட்டுள்ளது.
செல்ஃபி போட்டோ லேஅவுட் 3.0 எனும் செயலி போன் கேமராவை பிரிண்டருடன் இணைக்க அனுமதிக்கிறது. இதன் வாயிலாக நேரடியாக போனில் போட்டோ எடுத்து நேரடியாக பிரிண்ட் செய்யலாம்.
Selphy CP1500 பிரிண்டரானது iOS, iPadOS, Android OS ஆகிய இயங்குதளங்களுடன் ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ளது. பல வேலைகளை செய்யும் ஒரு சிறிய கருவி தான் இந்த புதிய கேனான் பிரிண்டர். சிறிய அளவில் இருப்பதால் எங்கு வேண்டும் என்றாலும் சிரமமில்லாமல் எடுத்துச் செல்லலாம்.
இந்த பிரிண்டரில் புகைப்படங்களைப் பகிர 8 ஸ்மார்ட்போன்கள் வரை இணைக்க முடியும். இதன் அளவு தோராயமாக 100 x 148 மிமீ ஆக உள்ளது. சுமார் 41 வினாடிகளில் பெரிய அட்டைகளில் கலர் பிரிண்டை எடுக்க முடியும் என்று நிறுவனம் கூறியிருக்கிறது.