Apple Lockdown Feature: ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு WWDC நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக “லாக் டவுன் மோட்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் iOS 16 இயங்குதள பதிப்புடன் வருகிறது.
“Pegasus” மற்றும் பிற தீங்கிழைக்கும் மென்பொருளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக இந்த புதிய அம்சம் கொண்டுள்ளது. இச்சூழலில், இந்த பாதுகாப்பு முறையை உடைக்கும் நபர்களுக்கு $2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
மேலதிக செய்தி |
iPhone 13 Offers: ஐபோன் 13 மினி இப்போது அதிரடி தள்ளுபடி விலையில்; ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
லாக் டவுன் பயன்முறை என்பது மிகவும் கடுமையான பாதுகாப்பு முறையாகும். இது ஐபோன் பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. ஐபோன் உடன் பிற ஆப்பிள் தகவல் சாதனங்கள் ஹேக்கர்களால் குறிவைக்கப்படுகின்றன.
Apple Lockdown Mode-இல் என்னென்ன பாதுகாப்புகள் உள்ளன:
செய்திகள்: படங்கள் தவிர மற்ற பெரும்பாலான செய்தி இணைப்பு வகைகள் தடுக்கப்பட்டுள்ளன. இணைப்பு மாதிரிக்காட்சிகள் போன்ற சில அம்சங்கள் முடக்கப்பட்டுள்ளன.இணைய உலாவல்: லாக்டவுன் பயன்முறையிலிருந்து நம்பகமான தளத்தை பயனர் விலக்காத வரை, ஜஸ்ட்-இன்-டைம் (JIT) JavaScript தொகுப்பு போன்ற சில சிக்கலான வலைத் தொழில்நுட்பங்கள் முடக்கப்படும்.Apple சேவைகள்: பயனர் இதற்கு முன் அழைப்பு அல்லது கோரிக்கையை அனுப்பவில்லை என்றால், FaceTime அழைப்புகள் உள்பட உள்வரும் அழைப்புகள் மற்றும் சேவை கோரிக்கைகள் தடுக்கப்படும்.ஐபோன் பூட்டப்பட்டிருக்கும் போது கணினி அல்லது துணைக்கருவியுடன் வயர் வழியிலான இணைப்புகளைத் தடுக்கப்படும்.லாக்டவுன் பயன்முறை இயக்கப்பட்டிருக்கும் போது, புரொபைல்களை நிறுவ முடியாது.
Nothing Phone Issue: நத்திங் போனில் இப்படி ஒரு சிக்கலா? பரிதவிக்கும் வாடிக்கையாளர்!
பெகாசஸ் ஊழலுக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஐபோன் ஹேக் செய்யப்பட்டது. பல தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் குறிவைக்கப்பட்டனர். இதற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
மேலதிக செய்தி |
Canon Selphy பிரிண்டர் உங்கள் நினைவுகளின் நாயகன் என்று சொன்னால் நம்புவீர்களா?
தற்போது நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த புதிய Lockdown பயன்முறை பயன்முறை iOS 16 பதிப்பில் கிடைக்கும். ஆப்பிளின் லாக்டவுன் பயன்முறை ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள், மேக் கணினிகளில் வேலை செய்யும். இந்த அம்சம் ஐபோனில் உள்வரும் இணைப்புகளைத் தடுக்கிறது.
ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஜீரோ கிளிக்” ஹேக்கிங் நுட்பங்களிலிருந்து பாதுகாக்க இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பைவேர் நிறுவனங்களும் அவசரகாலத்தில் பாதுகாப்பை உடைக்க, பல்வேறு மென்பொருள்களை உருவாக்கி வருகின்றன.