அகில இந்திய தரவரிசை; வேகமாக முன்னேறிய திருச்சி என்.ஐ.டி: இயக்குனர் அகிலா தகவல்

Trichy NIT place 8 in NIRF Ranking: திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி கல்லூரி) என்.ஐ.ஆர்.எப் தரவரிசையில் 8வது இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

அகில இந்திய அந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கான இந்திய அரசின் என்.ஐ.ஆர்.எப் தரவரிசையில் திருச்சி என்.ஐ.டி கல்லூரி பொறியியல் பிரிவில் 69.17 மதிப்பெண்களுடன் 8வது இடத்திற்கு உயர்ந்தது, கடந்த ஆண்டு 66.08 மதிப்பெண்ணிலிருந்து முன்னேறி உள்ளது. 

இதையும் படியுங்கள்: TNPSC; தமிழ்நாடு அரசு வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!

ஆராய்ச்சி வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரித்ததன் காரணமாக, ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறையில், தரவரிசையின் அனைத்து அளவுகளிலும் நிறுவனம் மேம்பட்டு உள்ளது. 

இந்த நிறுவனம் அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கு வலுவான உந்துதலைக் கொடுத்தது. இது தவிர, திட்டங்கள், மானியங்கள், ஆலோசனை மற்றும் தொடர் கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேம்பட்ட வேலை வாய்ப்பு மற்றும் சராசரி சம்பளத்துடன் பட்டப்படிப்பு முடிவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. பிஎச்டி பயில்பவர் எண்ணிக்கையும், பட்டம் பெற்ற அறிஞர்களும் கணிசமாக உயர்ந்து உள்ளனர்.

1 முதல் 7 நிலைகளில் உள்ள 7 நிறுவப்பட்ட ஐ.ஐ.டி.,களுடன் லீடர் போர்டைப் பகிர்ந்து கொள்ளும் திருச்சி என்.ஐ.டி இன்ஜினியரிங்கில் நம்பர் 8 ஆக இருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ஒட்டுமொத்த பிரிவு தரவரிசையில், திருச்சி என்.ஐ.டி 23வது இடத்திலிருந்து 21வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

நாட்டின் முதல் 25 கல்வி நிறுவனங்களுக்குள் தரவரிசையை மேம்படுத்த தொடர்ந்து ஆதரவளித்து உதவிய ஆசிரியர், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை திருச்சி என்.ஐ.டி கல்லூரி இயக்குநர் டாக்டர் அகிலா பாராட்டினார்.  

மேலும் கடந்த 4 ஆண்டுகளாக பொறியியல் துறையில் 12 வது இடத்திலிருந்து 8 வது இடத்திற்கு தொடர்ந்து முன்னேறி வருகிறது, இது ஒரு கடினமான சாதனையாகும். திருச்சி என்.ஐ.டி வெளியீடுகளின் எண்ணிக்கையிலும் தரத்திலும் முதலிடம் வகிக்கும் வகையில், முனைவர் பட்டம் பெற்று, கடினமாக உழைக்குமாறு ஆசிரியர்களை என்.ஐ.டி இயக்குனர் அகிலா ஊக்குவித்தார். 

அறிஞர்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் மாணவர்களுக்கான உயர் படிப்புகள், திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவை வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக பெருமையை அடைய உதவும். தரவரிசைக்கான தரவைத் தொகுக்க என்.ஐ.ஆர்.எப் தரவு நுண்ணறிவுக் குழுவின் நேர்மையான முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

க. சண்முகவடிவேல் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.