அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி, எஸ்.ஓ.எஸ், ரெக்கார்டிங்ஸ் அம்சங்கள்; அசத்தும் திருச்சி கலெக்டர்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழகத்தில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வருவாய்த் துறை, வளர்ச்சித் துறைகளின் 33 அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூபாய் 10.23 லட்ச ரூபாய் மதிப்பில் அதி விரைவு தகவல் தொடர்புக்காக ‘புஷ் டு டாக்’ எனும் வாக்கி டாக்கியினை, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வழங்கியுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

’’இந்த வாக்கி டாக்கி கருவியானது, மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் வலுவலர், 4 வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர், 11 வட்டாட்சியர்கள், 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்கி டாக்கியானது இன்டர்நெட் கனெக்‌ஷனுடன் உள்ளது, நாட்டின் எப்பகுதியில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியும். மேலும், இதில் கேமரா இணைப்பும் உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரே நேரத்தில் அனைவருடனும், வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை அலுவலர்களுடனும் என தனித்தனியாகவும் தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம் அதிவிரைவு தகவல் ஏற்படுத்தப்பட்டு, அவசரகாலப் பணிகளை திறம்படச் செய்திட ஏதுவாகும். பேரிடர் காலங்களில் இதன் பயன்பாடு மிக முக்கியமானதாக அமையும்” என்கின்றனர் அதிகாரிகள்.

திருச்சி கலெக்டர் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புஷ் டு டாக் எனப்படும் வாக்கி டாக்கி

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் பேசினோம். “புஷ் டு டாக் எனப்படும் இந்த வாக்கி டாக்கியானது மொபைல் நெட்வொர்க் மூலமாக இயங்குகிறது. எனவே, இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமாலும் நான் என்னுடைய மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுடன் பேச முடியும். அதிகாரிகளுடனான கம்யூனிக்கேஷனை துரிதப்படுத்துவதற்கும், மக்கள் பிரச்னைகளை தெரியப்படுத்தி உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் இதை அதிகாரிகளுக்கு கொடுத்திருக்கிறோம். இதன்மூலம் ஒரே நேரத்தில் மாவட்டத்தில் வாக்கி டாக்கி இணைப்பிலுள்ள அனைத்து அதிகாரிகளுடன் பேச முடியும். குறிப்பிட்ட துறைகளை மட்டும் செலக்ட் செய்தும் பேச முடியும்.

மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுல்லாமல், செல்ஃபோனை போல இதில் கேமராவும் இருக்கிறது. இதன் மூலமாக ஃபோட்டோ, வீடியோ மற்றும் மெசேஜ் போன்றவற்றை அனுப்ப முடியும். மேலும், இரவு நேரங்களில் பெண் அதிகாரிகள் மண் லாரியை பிடிக்கச் சென்றால், இந்த வாக்கி டாக்கியில் எஸ்.ஓ.எஸ் பட்டன் இருக்கிறது. அந்த பட்டனை க்ளிக் செய்தால், சம்பந்தப்பட்ட்ட அதிகாரி எந்த லொகேஷனில் இருக்கிறார் என்பது, அனைத்து வாக்கி டாக்கிகளுக்கும் மெசேஜ் ஆகச் சென்றுவிடும்.

கலெக்டர் பிரதீப் குமார்

ஒரு தகவலை அனைத்து அதிகாரிகளுக்கும் தனித்தனியாக நான் கூப்பிட்டு சொல்வதைவிட, ஓரே நேரத்தில் அந்தத் தகவலை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு. 30 ரெக்கார்டிங்ஸ் வரை இந்த வாக்கி டாக்கியில் ரெக்கார்ட் ஆகும். அதனால் நான் பேசும்போது அதிகாரிகள் வேறு ஏதாவது வேலையில் இருந்தால் கூட, நான் பேசிய ரெக்கார்டிங்ஸ் அவர்களுடைய வாக்கி டாக்கியில் இருக்கும். தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சியில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு இதை கொடுத்திருக்கிறோம். அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான வேளாண் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கொடுக்க இருக்கிறோம்” என்றார்.

சிறப்பு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.