பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வைரல் ஜோடியாக வலம் வரும் அமீர் பாவனி இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. அதை இருவருமே மறுக்காத நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பாவனி தனது காதலை உறுதி செய்துள்ளார்.
விஜய் டிவியின் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதில் சமீபத்தில் நிறைவடைந்த சீசன் 5-ல் கவனம் ஈர்த்த ஜோடிதான் அமீர் பாவனி ஜோடி. ஏற்கனவே திருமணமாகி தனது கணவனை பறிகொடுத்த பாவனி தனது சோக கதையை பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் சொல்லும்போதே ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர்.
இவரின் வாழக்கை நிலையை தெரிந்துகொண்டு பிக்பாஸ் வீ்ட்டில் இருந்த பல போட்டியாளர்கள் அனுதாபத்தை காட்டிய நிலையில், வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீர் ஒரு படி மேலே சென்று பாவனியுடன் நெருக்கம் காண்பித்தார். அதுவரை ஏனோதானே என்று சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அமீர் வருகைக்கு பின் இளமை துள்ளளுடன் அரங்கேறியது.
இவர்களின் நெருக்கத்தை பார்த்த போட்டியாளர்களும் ரசிகர்களும் அமீர் பாவனி இருவரும் காதலிப்பதாக சொல்லிவந்தனர். அதற்கு ஏற்றார்போல் அவர்களும்நடந்து கொண்டனர். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் ஒன்றாக விளம்பரங்களில் நடிப்பது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது என இருந்து வருகின்றனர்.
அதேபோல் பி.பி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாடி வருகின்றனர். இவர்களின் நடனத்தின் மூலம் இநத நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களாக இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துகொண்டே இருந்தது.
தற்போது இந்த கேள்விக்கு விடை சொல்லும் விதமாக அமீர் பிறந்த நாளில் பாவனி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அமீருடன் கட்டிபிடித்துக்கொண்டு இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள பாவனி, பிறர் வாழ்வில் மகிழ்ச்சியை பரப்பவும், பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பவும் தெரிந்த உங்களைப் போன்ற ஒருவரைப் பெற்றிருப்பது உண்மையிலேயே பாக்கியம், நான் உங்களிடமிருந்து பெறும் அன்பும் அக்கறையும் இந்த பூமியில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் நல்லது கெட்டது நேசித்ததற்கு நன்றி, தங்கமான இதயம் கொண்ட ஒரு மனிதன், நான் பல விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன், லவ் யூ டா பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் அமீருடனான தனது காதலை பாவனி உறுதி செய்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.