அரசாங்க ஊழியர்களின் ஜூலை மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் திட்டமிட்டபடி வழங்கப்படும் என நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று (14)தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 92 பில்லியன் ரூபாவும், ஓய்வூதியம் வழங்குவதற்காக 25.5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் எனவும், அதற்கான நிதியை திறைசேரி ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்க முடியாது என்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும், அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் எழவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.