நாட்டில் சராசரியாக ஒன்பது இலட்சம் குடும்பங்கள் தங்களது அன்றாட உணவைப் பெற்றுக்கொள்ளக் கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் உள்ள 17 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 9 இலட்சம் குடும்பங்கள் ஒரு வேளை உணவு அல்லது இரண்டு வேளை உணவு உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார்.
மூடப்படும் சிறுதொழில் நிறுவனங்கள்
மேலும், பொருளாதார நெருக்கடியால் 1,500,20 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக பேராசிரியர் கூறினார்.
இந்த வர்த்தக ஸ்தலங்களில் 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிவதாகவும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.