கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் வசூல்ராஜா MBBS. இந்தப் படத்தில் கமல் ஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் என்ற முறையை பிரபலப்படுத்தினார். யாரேனும் சிடுசிடுவென்றோ, விரக்தியாகவோ இருந்தால் அவர்களை கமல் கட்டிப்பிடிப்பார். அப்போது அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றி சாந்தமாவது போல் காட்சிகள் இருக்கும்.
சினிமாவில் மட்டுமின்றி நேரிலும் யாரேனும் ஒருவர் மற்றொருவரை கட்டிப்பிடித்தால் நேர்மறையான எண்ணங்களே தோன்றும். தற்போது இந்த விஷயம் பல நாடுகளில் பரவி வருகிறது. மசாஜ், ஸ்பா போன்று கட்டிப்பிடி வைத்தியமும் ஒரு சேவையாக மாற ஆரம்பித்துள்ளது. இந்த முறையை சிலர் விமர்சனம் செய்தாலும் கட்டிப்பிடிப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படுகின்றன என்றே பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் கட்டிப்பிடி வைத்தியம் தற்போது தொழிலாக மாறியிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ட்ரெவர் ஹூடன் என்னும் இளைஞர் Embrace Connections என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் கட்டிப்பிடி வைத்தியம் வழங்கப்படுகிறது.
இந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்காக ஒரு மணி நேரம் உடைய ஒரு செஷனுக்கு 75 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 7,100 ரூபாய் ஆகும்.
இதில் இளைஞர்கள், பெண்கள் முதல் முதியவர்கள்வரை கட்டிப்பிடி வைத்தியத்தை பெற்றுவருகின்றனர். இந்த வைத்தியத்தின் மூலம் மன இறுக்கம் நீங்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஹூடன் கூறுகையில், “கட்டி அணைப்பதை தாண்டி ஒருவருக்கு அக்கறை, பாசம், அன்பு ஆகியவற்றை நான் கொடுக்கிறேன். இதை எல்லோராலும் சாதாரணமாக செய்துவிட முடியாது.
மேலும் படிக்க | பிரபஞ்சத்தின் புகைப்படமா, சமையலறை டைல்ஸா? – நாசாவைக் கிண்டல் செய்த எலான் மஸ்க்
என்னை பாலியல் தொழிலாளி என்று பலர் நேரடியாகவே கூறுவார்கள். இருந்தாலும் நான் மனம் தளரமாட்டேன். மனித உறவுகளை பலப்படுத்துவதற்கு இதனை செய்கிறேன். இதன் மூலம் நான் மிகவும் மன நிறைவோடு இருக்கிறேன்” என்றார். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு கட்டணம் வசூலிக்கும் நிகழ்வு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | வளர்ப்பு மகளுடன் ரகசிய உறவு; எரோல் மஸ்க் கொடுத்த அதிர்ச்சித் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ