கொள்ளுபிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று இந்த இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கைரேகைகள் சேகரிப்பு
இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்ந்தும் அங்கேயே தொடர்கின்றனர்.
அவர்கள் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களது கைரேகைகளை எடுத்துள்ளனர்.
அத்துடன் போராட்டக்காரர்கள் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய போதிலும் அதற்கு முன்னர் கட்டப்பட்ட கூடாரங்களிலேயே அவர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், போராட்டக்குழுவினர் நேற்று (15) காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.