தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் எந்த பகைமையும் கிடையாது, கொள்கைகள் தான் வேறு என்றும் அவர்கள் செய்யும் தவறுகளை தான் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் ‘நமக்காக நம்ம எம்.எல்.ஏ.’ என்ற மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவையை தொடங்கி வைத்தபின், அண்ணாமலை இவ்வாறு பேட்டியளித்தார்.