மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 18ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது.
மேலும், வரும் 17ஆம் தேதி வரை மத்திய கிழக்கு, தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.