புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பதில் ஜனாதிபதியாக தாம் செயல்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை இலங்கையின் பதில் ஜனாதிபதியாக தாம் செயல்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நேற்று (15) விசேட உரையாற்றினார்.

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொண்டதாக அவர் சுட்டிக்கட்டினார்.

முதலாவதாக, ஜனாதிபதிக்கு ப் பயன்படுத்தப்படும் ‘அதிமேதகு’  “His Excellency”, என்ற சொல் இனி பயன்படுத்தப்படாது என்று அவர் கூறினார்.

இரண்டாவதாக, நாட்டிற்கு ஒரே ஒரு தேசியக் கொடியே தேவை. அதுவே பயன்படுத்தப்பட வேண்டும், இதனால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடி நீக்கப்படும். அது பணன்படுத்தப்பட மாட்டாது என்றும் பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இதன்போது தெரிவித்த திரு ரணில் விக்ரமசிங்க
மக்கள் அரசியலில் பாரிய வித்தியாசத்தை எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தன்னால் இயலுமான விடயங்களை செய்வதாகவும் உறுதியளித்தார்.

முழு நாடும் புதிய பயணத்தை மேற்கொள்வதற்கான பின்புலம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பதில் ஜனாதிபதி, ஊழலற்ற அமைதியான, வளமான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான சந்தர்ப்பம் மிக விரிவாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை புதிய ஜனாதிபதியின் பொருட்டு முன்னெடுக்கப்படும்.

நாட்டில் சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.  அறவழிப்போராட்டங்களை முன்னெடுக்க மக்களுக்கு உரிமை உண்டு.

இருந்தாலும், புதிய ஜனாதிபதி தெரிவின் போது சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க முனைவதாகவும் இதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

பாசிசவாத முறையில் சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு. இரண்டு துப்பாக்கிகளும் குண்டுகளும் காணாமற்போயுள்ளன.பாதுகாப்பு தரப்பினர் 24 பேர் காயமடைந்துள்ளனர். , உண்மையான அறவழிப்போராட்டக்காரர்கள் அவ்வாறான வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள் என நம்புகின்றேன்..

கிளர்ச்சிக்காரர்களுக்கும் அறவழிப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனினும், அரசியலமைப்பிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன்

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் பட்சத்தில், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதனால் எரிபொருள், மின்சாரம், நீர் விநியோகம், உணவுப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றுக்கு தடை ஏற்படக்கூடும் .இதனை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதானி, பொலிஸ்மா அதிபர், முப்படைத் தளபதிகள் அடங்கலாக விசேட குழு ஒன்றை நியமித்துள்ளேன். எவ்வித அரசியல் தலையீடும் இன்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

சர்வகட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை கடந்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது அறிவித்தேன்.இதன் போது

அது குறித்து பொது நிலைப்பாடுக்கு வருமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கோரிக்கை விடுத்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.