மும்பை : மஹாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பை, தானே உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது.
இந்த மழைக்கு, இதுவரையிலும் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, மாநில பேரிடர் மீட்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கை:மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையால் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 1 முதல் நேற்று வரை 100 பேர் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில்சிக்கி பலியாகியுள்ளனர்.தற்போது 20 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நிவாரண முகாம்களில் 3873 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குஜராத்தின் தெற்கு மற்றும் சவுராஷ்டிராபகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 வரையிலான 24 மணி நேரத்தில் இங்கு 20 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.வல்சாத், நவ்சாரி மற்றும் கிர்சோம்ந்தா ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை கொட்டியது. குஜராத்தின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்திலும் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதுதொடர்பான செய்தி சேகரிக்க, செய்தித் தொலைக்காட்சி நிருபர் ஜமீர்,36, கரீம்நகர் மாவட்டம் ராய்கல் கிராமத்துக்கு நேற்று முன் தினம்சென்றார்.
அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.நேற்று காலை ராமாஜிபேட்டை அருகே அழுகிய நிலையில் ஜமீர் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஜக்தியால் நகரை சேர்ந்த ஜமீருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement