பிரிட்டனை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தான் குடியிருக்கும் அபார்ட்மென்டுக்கு வெளியே உள்ள மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதால் அவருக்கு ரூபாய் 94 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த பெண் தனக்குரிய இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் மாற்றுத்திறனாளி பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..?
இதுகுறித்து அந்த பெண் விளக்கம் அளித்த போதிலும் அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளி
பிரிட்டன் நாட்டில் கார்டிஃப் என்ற பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி 34 வயதான செரிஸ் ஜெம்மாவால் என்பவர் தனக்குரிய இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் குடியிருப்புக்கு வரும் மாற்றுத்திறனாளி பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டார்.
அபராதம்
செரிஸ் ஜெம்மாவால் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தன்னுடைய வாகனத்தை நிறுத்த முடியவில்லை என்றும், அவரது சக்கர நாற்காலியை ஒரு தூண் தடுக்கிறது என்று விளக்கம் அளித்தபோதிலும் குடியிருப்பு நிர்வாகி அபராதத்தை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
பார்வையாளர்களின் பார்க்கிங்
செரிஸ் ஜெம்மாவால் கடந்த சில வருடங்களாக வேல்ஸின் கார்டிஃப் என்ற பகுதியில் உள்ள ப்ராஸ்பெக்ட் பிளேஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். பார்வையாளர்களுக்கு மட்டுமே கண்டிப்பாக பார்க்கிங் பகுதியாக இருக்கும் இடத்தில் குடியிருப்புவாசிகள் பார்க்கிங் செய்ய கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் செரிஸ் ஜெம்மாவால் பார்வையாளர்களுக்கு உரிய இடத்தில் வாகனத்தை நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விளக்கம்
இதுகுறித்து செரிஸ் ஜெம்மாவால் விளக்கமளித்தபோது, ‘இரண்டு வருடங்களாக இந்த பிரச்சனை என்னை துன்புறுத்துகிறது என்றும், என்னால் எனக்குரிய இடத்தில் சக்கர நாற்காலியை பார்க்கிங் செய்ய முடியவில்லை என்றும், இதை நான் பலமுறை நிர்வாகத்திடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்
வழக்கறிஞர்
ஊனமுற்றோர் உரிமை வழக்கறிஞர் கிறிஸ் ஃப்ரை இந்த சம்பவம் குறித்து கூறுகையில், ‘உண்மை என்னவென்றால், செரிஸ் ஜெம்மா மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அவரால் அணுக முடியாததாக இருந்தது. அவருக்கு நியாயம் வழங்க வேண்டியது கட்டிட நிர்வாகத்தின் கடமை. அவருக்கு வேறு சரியான இடத்தை அவர்கள் தரவில்லை என்றால் அவர்கள் சமத்துவச் சட்டத்தை மீறுகிறார்கள் என்று தான் அர்த்தம்’ என்று கூறினார்.
கட்டிட நிர்வாகிகள் என்ன சொன்னார்கள்?
அந்த கட்டிடத்தின் மேலாண்மை நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது, ‘நாங்கள் ஒரு மாற்றுத்திறனாளியை பார்வையாளர் இடத்தை பயன்படுத்த அனுமதித்தால், மற்ற குடியிருப்பாளர்களும் விதியை மீறுவார்கள் என்றும், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அவருக்கு பார்க்கிங் செய்ய உரிமை உண்டு என்றும், பார்வையாளர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அவரை அனுமதிக்க முடியாது என்றும் கூறினர்.
Why Disabled woman fined for using disabled parking space?
Disabled Woman Was Fined Over Rs 94,000 For Using The Disabled Parking Space Outside | மாற்றுத்திறனாளி பார்க்கிங் இடத்தை பயன்படுத்திய மாற்றுத்திறனாளிக்கு ரூ.94,000 அபராதம்… ஏன் தெரியுமா?