ரஷ்யாவிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்த உக்ரைன்! கை கொடுத்த பிரித்தானியா… இது அசுர சக்தி


ரஷ்யாவுக்கு எதிரான போரில் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் சக்திவாய்ந்த அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பு உக்ரைன் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 143-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

மேலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

இந்நிலையில், அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்த உக்ரைன்! கை கொடுத்த பிரித்தானியா... இது அசுர சக்தி | Ukraine Got Powerful Rocket Launcher Russia

எம்270 எனப்படும் இந்த ராக்கெட் அமைப்பில் இருந்து 40 வினாடிகளில் 12 முறை ராக்கெட்டுகளை ஏவமுடியும்.

இந்த ஆயுதம் ரஷ்யாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றும் என உக்ரைன் கருதுகிறது.

எம்270 ரக ராக்கெட் ஏவுதள அமைப்பு அமெரிக்காவால் தயாரிக்கப்படும் நிலையில் உலகின் பல நாடுகள் இந்த அமைப்பை வைத்துள்ளன.

இந்த ராக்கெட் அமைப்பை தங்களுக்கு எந்த நாடு வழங்கியது என்ற விவரத்தை உக்ரைன் அரசு வெளியிடவில்லை.

ஆனால், பிரித்தானியா இந்த ராக்கெட் அமைப்பை உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.