வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ஆயுதப் படைகளின் மூலதன கொள்முதல், தளவாடங்கள், பராமரிப்பு ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் திறனை தணிக்கை செய்ய உயர்மட்ட குழுவை ராணுவ அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ராணுவ அமைச்சகம் அதன் செயல்பாடு மற்றும் செயல் திறனை தணிக்கை செய்து அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஆலோசனை வழங்க, துறை செயலரின் தலைமையில், உயர்மட்ட குழுவை உருவாக்கி உள்ளது.
ராணுவ அமைச்சகத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டவும், திட்டமிடுதல், செயல்படுத்துதலில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கவும் இந்த உயர்மட்ட குழு உறுதுணையாக இருக்கும். மேலும், துறை ரீதியான கட்டுப்பாடுகள், நிதி நடைமுறைகளில் நேர்மை, ஆபத்து காரணிகளை அடையாளம் காணுதல் போன்றவற்றில் முறையான மேம்பாடுகளை இந்த குழு பரிந்துரைக்கும்.
ராணுவ செயலரின் தலைமையிலான இந்த குழுவில், முப்படைகளின் துணை தளபதிகள், ராணுவ அமைச்சகத்தின் நிதி செயலர், ராணுவ கணக்கியல் கட்டுப்பாட்டாளர், கொள்முதல் பிரிவு இயக்குனர், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன மூத்த அதிகாரிகள் இடம் பெறுவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement